பிரதமர் மோடி ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளதாக இன்று (ஏப்ரல் 2) பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் முதல்கட்டமாக ஏப்ரல்19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதற்கான தேர்தல் பிரச்சார பணிகளில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தேசிய தலைவர்களும் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
பாஜகவினரின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் அமித்ஷா தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகம் வருகை தர இருப்பதாகவும், சென்னையில் வாகன அணிவகுப்பு மூலம் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் சென்னையில் போட்டியிடும், தமிழிசை செளந்தரராஜன், பால் கனகராஜ், வினோஜ் பி செல்வம் மற்றும் பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ்-ஐ கொச்சைப்படுத்துகிறார்” : ஜி.கே.வாசன் விமர்சனம்!
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா