எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், இருவரையும் சந்திக்காமல் பிரதமர் மோடி கர்நாடகா புறப்பட்டுச் சென்றார்.
ஒருநாள் பயணமாக இன்று (ஏப்ரல் 8) பிற்பகல் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு, சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில், மற்றும் விவேகானந்தர் இல்லத்தின் 125ஆவது ஆண்டு விழா, பல்லாவரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
பிரதமர் வருகையையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.
இன்று நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பின் பிரதமரை தனித் தனியாக சந்திக்க காத்திருந்தனர். ஆனால் இருவரையும் பிரதமர் சந்திக்கவில்லை. நேரமின்மை காரணமாக அவர் கர்நாடகா புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
பிரதமரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்டனர். தனிப்பட்ட முறையில் இருவரும் பிரதமரை சந்திக்கவில்லை.
பிரியா
மோடி – ஸ்டாலின் சந்திப்பு: நடந்தது என்ன?
டிஜிட்டல் திண்ணை: மோடி விசிட், அண்ணாமலை ஆப்சென்ட்… கர்நாடகமா? கட்டமா?