கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஜனவரி 19) மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.
பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.
பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
கூட்டணிக் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், தமாக தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோரும் வரவேற்றனர்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு சென்றார். அங்கு அவரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியத்துக்கு புறப்பட்டார்.
பிரதமரை வரவேற்க பாஜக சார்பில் சிவானந்தா சாலையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் போன்றும், ராமர் கோயில் மாதிரியும் அமைக்கப்பட்டுள்ளன.
பரதநாட்டியம், பொய்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
படிப்புக்காக வேலைக்குச் சென்றேன்… ஆனால்… : திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் வேலை செய்த பெண் பேட்டி!
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்: விஜய் தேவரகொண்டா