குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இன்று (ஜூலை 18) நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள குழுக் கூட்ட அறையில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையிலிருந்து நேரடியாகச் சட்டப்பேரவை வளாகத்திற்குச் சென்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கினைச் செலுத்தினார். தொடர்ந்து அனைத்து கட்சி எம்.எல்.ஏ க்களும், எம்.பி களும் வர தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் நாசர் ஆகியோர் மாலை நான்கு மணிக்கு மேல் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சீனிவாசன்