இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 26) தமிழ்நாட்டிற்கு வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நாளை 8வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார்.
விமானப்படை தனி விமானத்தில் இன்று மாலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் குடிரயசுத் தலைவர் திரவுபதி முர்மு மாலை 6.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்க உள்ளனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு ஓய்வெடுக்க உள்ளார்.
தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் 9.30 வரை ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கு காலை 10.15 மணி முல்தல் 11.15 மணி வரை விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்கூர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பின்னர் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டு 11.55 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு குடியரசுத் தலைவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்வு நடக்கிறது.
தொடர்ந்து 12.05 மணிக்கு விமானப்படை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் காரணமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வேலைவாய்ப்பு : TNUIFSL நிறுவனத்தில் பணி!
நெதர்லாந்துக்கு நெத்தியடி… ’1999’ வரலாற்றை மீண்டும் உருவாக்கும் ஆஸ்திரேலியா!