குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 1)சந்தித்துப் பேசினார்.
மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா கூட்டணி ஜூலை29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்குச் சென்று ஆய்வு நடத்தி வந்தன.
இந்நிலையில் இந்தியா கூட்டணி மணிப்பூர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தது. இதனை ஏற்று நாளை காலை 11.30 மணிக்குச் சந்திக்கக் குடியரசுத் தலைவர் நேரம் கொடுத்துள்ளார்.
அந்தவகையில் இந்தியா கூட்டணி நாளை குடியரசுத் தலைவரைச் சந்திக்க இருக்கும் நிலையில் இன்று உள் துறை அமைச்சர் அமித்ஷா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அமித் ஷா, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு முன்னதாக அமித்ஷா இன்று நேரில் சென்று பார்த்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
இரண்டு ரவுடிகள் என்கவுன்டர்: டிஜிபி விளக்கம்!
மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் வெல்லுமா?