மருத்துவமனையில் விஜயகாந்த் இருக்கும் புதிய புகைப்படத்தை பிரேமலதா விஜயகாந்த் இன்று (டிசம்பர் 2) இரவு வெளியிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் பின்னர், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுகிறது என்று கடந்த நவம்பர் 29 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து அரசியல் தலைவர்களும், தேமுதிகவினரும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்து வந்தனர். இதற்கிடையே அவரது மனைவி பிரேமலதா, “விஜயகாந்த் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். அதுவரை வதந்திகளை நம்பாதீர்கள்” என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு நேரில் சென்ற தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், “விஜயகாந்த் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்த செய்திகள் எல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை சந்தித்தோம். அவரும் விஜயகாந்த் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்” என்று கூறிய நாசர் விஜயகாந்த் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை என்றார்.
இதனால் விஜயகாந்திற்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா விஜயகாந்த் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
NZ vs BAN: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்
டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா
இந்த புகைப்படம் அவர் நலமாக இருப்பது போல் தெரியவில்லை….. தலை சாய்வாக உள்ளது…. பல சந்தேகங்களை எழுப்புகிறது தற்போது தான்…….
Annan vijayakanth avarkal nalamudan vala eraivanai kettukkole om. Avar nanraka erukkavendum.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. லஞ்ச ஒழிப்பு துறையில் எத்தனையோ இந்த மாதிரி நடந்திருக்கிறதோ