தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜூலை 24) நடைபெற்று வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லாதபோது தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு எங்களுக்கு எப்படி அழைப்பு விடுப்பார்கள்?
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து வெகுவிரைவில் விஜயகாந்த் அறிவிப்பார். அதிமுக திமுக எம்.பி-க்கள் தமிழகத்திற்கான உரிமைகளை பெற்று தரவில்லை.
கள்ளச்சாராயம், போதை பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அனைத்து கனிம வளங்களும் சூறையாடப்படுகிறது.
எதிர்க்கட்சி கூட்டணிகளுடைய பெயர்கள் தான் மாறுகிறது மக்களுடைய நிலை மாறவில்லை. அவர்களுக்குள்ளே பல விதமான முரண்பாடுகள் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக வீட்டில் ரெய்டு நடத்துவார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக வீட்டில் சோதனை செய்வார்கள். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றவரிடம்
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைமையில் கூட்டணி அமைப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அப்படி எந்த யோசனையும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!
மின்சார இணைப்பு பெயர் மாற்றம்: சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?