நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி கணக்கை துவங்கும்: பிரேமலதா உறுதி!

Published On:

| By Selvam

premalatha vijayakanth says dmdk win 2024 election

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி-க்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (டிசம்பர் 14) தெரிவித்துள்ளார். premalatha vijayakanth says dmdk win 2024 election

தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “கேப்டன் இன்றைக்கு மிகப்பெரிய பொறுப்பை எனக்கு தந்துள்ளார். தொண்டர்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். தலைவர் ஆரம்பித்த கட்சியை கரைசேர்க்க வேண்டும். எனக்கு தந்த பொறுப்பு மலர்கிரீடம் கிடையாது, முள்கிரீடம்.

உண்மையிலேயே நான் தற்போது ஸ்ட்ரெஸ்புல்லாக இருக்கிறேன். 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 29 தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். அந்த வரலாறு மீண்டும் திரும்பும். கட்சியில், எந்த விஷயமாக இருந்தாலும் என்னிடம் வந்து சொல்லுங்கள்.

இதுவரை தேமுதிக ஒரு எம்.பி கணக்கை கூட தொடங்கவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக தேமுதிக டெல்லிக்கு செல்வது உறுதி. கூட்டணி அமைத்தவுடன் முதலில் ராஜ்ய சபா எம்.பி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். நாம் கேட்கின்ற தொகுதியை தர வேண்டும்.

இன்று அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள். தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சிகளும் கூட்டணி முடிவு எடுக்க முடியாத சூழல் உள்ளது. 2024 நமது லட்சியம், 2026-ல் நமது ஆட்சி நிச்சயம். தலைவர் கேப்டனை முதல்வர் பதவியில் அமரவைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் நேரடியாக சுற்றுப்பயணம் செல்ல போகிறேன். மக்கள் விரோத பிரச்சனை எதுவாக இருந்தாலும், மாநில அரசோ, மத்திய அரசோ நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

வெகு விரைவில் புதிய தலைமை கழகம் கட்ட உள்ளோம். புதிய பதவிகள் அறிவிக்கப்படும். யூடியூப் சேனல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐடி விங் தொடங்க போகிறோம். கேப்டனை என் கண்ணின் இமை போல காத்துக்கொண்டிருக்கிறேன். அவருக்கு எதுவும் ஆகாது.

மாவட்ட செயலாளர்கள் ஒருவர் முகத்தில் கூட வெள்ளை தாடி இருக்க கூடாது. ஒட்டுமொத்த இளைஞர்களின் கட்சி தேமுதிக. நாம் மீண்டும் வீறுகொண்டு எழுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தி தெரியாதா? சென்னை பெண்ணை அவமதித்த சிஐஎஸ்எஃப் வீரர்! நடந்தது என்ன?

மாதவிடாய் விடுமுறை அளிக்க முடியாது : ஸ்மிருதி இரானி

வெள்ள பாதிப்பு: தமிழக அரசை பாராட்டிய மத்தியக் குழு – முதல்வர் ஸ்டாலின்

premalatha vijayakanth says dmdk win 2024 election

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment