அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா? – பிரேமலதா கேள்வி!
அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தஞ்சாவூரில் இன்று (செப்டம்பர் 27) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனை அரசியலாக்குகிறார்கள். விவசாயம் சார்ந்த பூமி தமிழகம். விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர் நிலைகளை தூர்வாருவதில்லை. தண்ணீரில் தமிழ்நாடு தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. இரண்டு கட்சிகளுக்குள் பிரச்சனை இல்லை. இரண்டு தலைவர்களுக்கு இடையிலான பிரச்சனை. இது நிரந்தரமா இல்லையா பொறுத்திருந்து பார்ப்போம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது குறித்த நல்ல முடிவை தேமுதிக எடுக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சனாதனம் குறித்த பாடம் நீக்கப்படுமா? – அன்பில் மகேஷ் பதில்!