சீமான் அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தவெகவின் கொள்கைகளை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து வருகிறார்.
“விஜய் ஒன்று திராவிடம் அல்லது தமிழ் தேசியம் ஏதாவது ஒரு கொள்கைக்கு வரவேண்டும். தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் வேறு. எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரிதான்” என்று சாடியுள்ளார் சீமான்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 4) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம், தவெக மாநாட்டுக்கு முன் விஜய்யை அன்புத் தம்பி என்று கூறி வந்த சீமான் இப்போது எதிரி என்று கூறுகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “அவர் திடீரென்று அந்நியனாக மாறுவார்.. திடீரென்று அம்பியாக மாறுவார். இதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
ஏன் விஜய்யை தம்பி என்று சொன்னார், பின்னர் லாரியில் அடிபட்டு சாவார் என்று சொன்னார். இதற்கெல்லாம் அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. விஜய் தனது கருத்தை கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் காலம் இருக்கிறது.” என கூறினார்.
2026ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது. இப்போது சொல்ல முடியாது” என கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டார் பிரேமலதா விஜயகாந்த்.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
பிரியா
பல்கலையில் அரை நிர்வாண போராட்டம்: ஈரான் மாணவி கைது… பின்னணி என்ன?
கேகேஆர் தக்க வைக்கவில்லை.. கண்களில் கண்ணீர் வந்தது- வெங்கடேஷ் ஐயர் உருக்கம்!