விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு… சூடுபிடிக்கும் அரசியல் களம்!

Published On:

| By christopher

Prashant Kishore meeting with Vijay

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை பிரசாந்த் கிஷோர் இன்று (பிப்ரவரி 10) சந்தித்துள்ளார். Prashant Kishore meeting with Vijay

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு கட்சியை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறார் விஜய். சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை 5 கட்டமாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமாரும், விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனாவும் தவெகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்ததாக நமது மின்னம்பலம் தளத்தில், டிஜிட்டல் திண்ணை: பாட்னா டு பட்டினப்பாக்கம்… ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டத்தை மாற்றிய பிரசாந்த் கிஷோர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழலில் பாஜக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிந்த பிரசாந்த் கிஷோர் தவெக தலைவர் விஜய்யை இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

வரும் மார்ச் மாதம் தமிழகத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share