do’s and don’ts… விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த 3 அட்வைஸ்!

Published On:

| By Aara

பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பிற்பகல், சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசினார். Prashant Kishore 3 advice to Vijay

இந்த சந்திப்பை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியான நியமன அறிவிப்புகள் வேகவேகமாக வெளியாகி வருகின்றன. ஏற்கனவே திட்டமிடப்பட்ட அறிவிப்புகள் தான் என்றாலும், பி.கே.வின் சந்திப்புக்குப் பிறகு கட்சி நடவடிக்கைகளில் சற்று தீவிரம் காட்டி வருகிறார் விஜய் என்கிறார்கள் கட்சி வட்டாரங்களிலேயே.

ஓரிரு மாதங்களுக்கு முன்பே, பிரசாந்த் கிஷோர் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் பணியாற்ற இருக்கிறார் என்று தான் தகவல்கள் வந்தன. மின்னம்பலத்திலும் இதுகுறித்து செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படியே அதிமுகவுக்காகத்தான் தேர்தல் பணியாற்ற இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

இந்நிலையில் ஜனவரி 16ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா பாட்னாவில் பிரசாந்த் கிஷோரை சந்தித்த நிலையில், அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் விளைவாகவே அதிமுகவில் சேர இருந்த ஆதவ் அர்ஜுனா… தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டார்.

இதுகுறித்து மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பாட்னா டு பட்டினப்பாக்கம் ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டத்தை மாற்றிய பிரசாந்த் கிஷோர் என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழலில் ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனையின் பெயரில் ‘எக்ஸ்பெக்ட் அட்வைசர்’ என்ற அடிப்படையில் விஜய்யை சந்தித்துள்ளார். Prashant Kishore 3 advice to Vijay

மேலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டில் 20 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியதாக தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் முதல் அனைத்து youtube சேனல்களிலும் செய்திகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றியெல்லாம் பிரசாந்த் கிஷோர் வட்டாரத்தில் நாம் பேசியபோது,

“இரண்டு மணி நேரம் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தார். அதை வைத்து 2000 வதந்திகளை பரப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர் நட்பு ரீதியான சந்திப்புக்காக தான் விஜய் வீட்டுக்கு வந்தார். அவர் தமிழக வெற்றி கழகம் பற்றி எந்த ஆய்வும் மதிப்பீடும் இதுவரை செய்யவில்லை. எனவே அவர் தவெக வுக்கு 20% வாக்கு வங்கி இருப்பதாக சொன்னார் என வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.

அதேநேரம் பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு மூன்று முக்கிய அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்று இருக்கிறார். Prashant Kishore 3 advice to Vijay

1. தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை கட்டமைப்பு ரீதியாக வலிமைப்படுத்தி தமிழகத்தின் கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு சினிமா செல்வாக்கு மட்டும் போதாது, அரசியல் ரீதியான உழைப்பு வேண்டும்.

2. சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தான் இந்த கட்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்வதை விட மெகா கூட்டணி அமைத்து அதன் மூலமாக எதிர்கொள்வது கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

3. இப்போது இருக்கும் திமுக கூட்டணி 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிலிருந்து பல்வேறு தேர்தல்களில் அந்த கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. அதே அளவுக்கு அக்கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு திமுக மீது அதிருப்தியும் இருக்கிறது. அந்த அதிருப்தியை பயன்படுத்தி திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் வாய்ப்புள்ளவற்றை அங்கிருந்து வெளியே கொண்டு வர வேண்டும். இதுதான் திமுகவின் தோல்விக்கு முதல் காரணமாக இருக்க இருக்க முடியும்’ என மூன்று அறிவுரைகளை விஜய்க்கு அளித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

இந்த அடிப்படையிலேயே விஜய்யின் செயல்பாடுகள் அமையும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share