சீமான் மீது வழக்கு: ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்

அரசியல்

புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் ஆட்சிக்கு வந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன். அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள்” என்று பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது. கடந்த மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷார் சீமான் பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து,

“வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று (மார்ச் 12) சீமான் மீது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவித்தல், 153 (B) (C), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் 505 (1), மிரட்டல் விடுத்தல் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பிரசாந்த் கிஷோர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.-

செல்வம்

”யானைக்குட்டியை பிடித்து கொண்டு அழுதிருக்கிறேன்” நெகிழும் பெள்ளி

புதுச்சேரி பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் என்ன?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *