எக்சிட் போல் தொடர்பான விவாதங்களில் பொதுமக்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எக்சிட் போல் முடிவுகள் வெளியானது.
இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18, ஏபிபி போன்ற முன்னணி ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட எக்சிட் போலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 – 400 இடங்களை பெற்று ஆட்சிக்கட்டிலில் மூன்றாவது முறையாக அமரும் என்று தெரிவித்திருந்தனர்.
அதேநேரத்தில் இந்தியா கூட்டணிக்கு 150 – 200 இடங்கள் கிடைக்கும் என்று எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியிருந்தன.
எக்சிட் போல் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இது எக்சிட் போல் அல்ல, மோடி மீடியாவின் ஃபேண்டஸி போல்” என்றார். மேலும், “இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்” என்று உறுதிபட தெரிவித்தார்.
தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர், “வீண் விவாதங்கள், போலி பத்திரிகையாளர்கள், தங்களை ஊடக வல்லுநர்கள் என்று சோஷியல் மீடியாவில் சுய பிரகடனம் செய்து கொள்பவர்களின் பகுப்பாய்வுகளில் உங்களின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எக்சிட் போல்… இந்தியா கூட்டணிக்கு மோடியின் கடைசி உளவியல் நெருக்கடி!
69% இடஒதுக்கீடு… சேகர் பாபு சொல்லிக்கொடுப்பதை பேசும் பிரகாஷ்ராஜ்: ஜெயக்குமார் தாக்கு!