கர்நாடகா தேர்தல்: பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்!

அரசியல் இந்தியா

கர்நாடகாவில் 40 சதவிகித கமிஷன் அரசுக்கு எதிராக தான் வாக்களித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மதியம் 1 மணியளவில் 37 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. கர்நாடாவில் 5.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

prakash raj karnataka election

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் தங்களது வாக்கை செலுத்தினர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சாந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள கன்னட மக்களே, நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிரானவன். நான் எனது வாக்கை 40 சதவிகித கமிஷன் அரசாங்கத்திற்கு எதிராக செலுத்தியுள்ளேன். உங்கள் மனசாட்சி படி கர்நாடகாவை பாதுகாப்பதற்காக வாக்களியுங்கள்” என்று தெரிவித்துள்ளார.

செல்வம்

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மனு!

டிஎம்கே ஃபைல்ஸ்: அண்ணாமலை மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *