மக்களவை தேர்தலுக்கு முன் இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் அ.தி.மு.க உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜனவரி 23) இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் பேசுகையில், “மோடியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லும் எடப்பாடி, ஜெயலலிதா, ‘இந்த லேடியா மோடியா பார்த்துவிடலாம்’ என்றாரே, அது போல் ‘எடப்பாடியா மோடியா’ என்று எடப்பாடி சவால் விடுவாரா?
எடப்பாடி தன்னை சூப்பர் புரட்சி தலைவர், சூப்பர் புரட்சி தலைவி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். முதல்வராக இருந்த 5 ஆண்டுகளிலும் ஒப்பந்தக்காரர்களை மட்டுமே சந்தித்த எடப்பாடி, கட்சிக்காரர்களை சந்திக்கவே இல்லை.
அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அனுகினால் மக்களவைக்கு முன்பாக இரட்டை இலை முடங்க வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெறமுடியாது.
அ.தி.மு.க வை இணைப்பதற்கு எடப்பாடியை தவிர எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். எடப்பாடி இல்லாமல் அதிமுக கட்சியை இணைப்போம்.” என்று வைத்திலிங்கம் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் உத்தரவு : ராகுல் மீது வழக்குப்பதிவு!
காந்திக்கு வந்த சத்திய சோதனை: அப்டேட் குமாரு
”ரொம்ப நாள் கழிச்சு நன்றாக தூங்கினேன்”- மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்