உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று வேலூர் நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
2006-2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிகாலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்படாததாலும் போதிய ஆதாரம் இல்லாததாலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரையும் ஜூன் 28-ஆம் தேதி வேலூர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யப்படாததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
செல்வம்
தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு: முத்தரசன் வேண்டுகோள்!
செந்தில் பாலாஜி சகோதரர் பங்களா வீட்டை முடக்கிய அமலாக்கத்துறை!