திமுக தரப்பில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வந்தாலும், இன்னொரு புறம் வேட்பாளர் தேர்வினையும் திமுக நடத்தி வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு பொன்முடி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார்.
பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.பியாக இருந்து வருகிறார்.
ஆனால் இம்முறை கெளதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியை வழங்குவதில் திமுக தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில் பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்து தற்போது காலியாக உள்ள திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியினை கெளதம் சிகாமணிக்கு வழங்குவதாக திமுக மேலிடம் பொன்முடியிடம் பேசியிருக்கிறது.
ஆனால் பொன்முடிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்க விருப்பமில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் அதன் மூலம் தான் மீண்டும் எம்.எல்.ஏ ஆவேன் என்று சொல்லி வருகிறார்.
ஆனாலும் கெளதம் சிகாமணிக்கு மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியைக் கொடுக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்வேஷிப்பின் கண்டதும் – திரைப்பட விமர்சனம்!
எலெக்ஷன் ப்ளாஷ்: நீலகிரி தொகுதி – தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக!