சில நாட்கள் சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி பயிற்சி பெற வேண்டும் என்பதனால் தான் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக தான் அமைச்சர் பொறுப்பை வழங்கியுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். அவரை முதலிலேயே அமைச்சராக்கியிருக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் சிறப்பாக பணியாற்றினார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற துடிதுடிப்புடன் செயலாற்றக்கூடியவர் உதயநிதி.
அவருக்கு எந்த துறை கொடுப்பது என்பது பற்றியெல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை அறிவிப்பார். உதயநிதி மிக திறமை பெற்ற ஒரு இளைஞர்.
அவரை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். திரைத்துறையில் இருந்தாலும், அரசியல் துறையில் இருந்தாலும் மிக சிறப்பாக செயல்படக்கூடியவர்.
சில நாட்கள் சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி பயிற்சி பெற வேண்டும் என்பதனால் தான் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.
ஆனால் அவரை முதலிலேயே அமைச்சராக்கி இருந்தாலும் கண்டிப்பாக தமிழகத்தின் எதிர்பார்ப்பிற்கேற்ப சிறப்பாக செயல்பட்டிருப்பார்.
இனி வரும் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கிற பொறுப்புகளையெல்லாம் ஏற்று செயல்படுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதை வேண்டாம் என்று சொல்கிறவர்கள் யாரும் கிடையாது. ஏன் தாமதாக கொடுக்கிறார்கள் என்று தான் கேட்டு வருகிறார்கள். வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை வைப்பது வழக்கமான ஒன்று தான்.
உதயநிதி விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என பொன்முடி தெரிவித்துள்ளார்.
செல்வம்
மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்
மனைவி மற்றும் 5 குழந்தைகள்:கொடூர தந்தை…அதிர்ந்த தமிழகம்!