உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என டிசம்பர் 19-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று டிசம்பர் 21 அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தண்டனையை அறிவிக்க உள்ளது.
இந்தசூழலில் இன்று காலை 10.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜரானார்.
முன்னதாக டிசம்பர் 19 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம் டிசம்பர் 21-ஆம் தேதி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஆஜராக உத்தரவிட்டது.
கொலை உள்ளிட்ட கடுமையான கிரிமினல் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆனவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட போதே சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
இந்தநிலையில் பொன்முடியை நேரில் அல்லது ஆன்லைன் மூலமாக ஆஜராக சொல்லி நீதிபதி உத்தரவிட்டிருந்ததால் தண்டனை அறிவித்த பிறகு அதை செயல்படுத்துவதற்கு நீதிபதி கால அவகாசம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் நிலவியது.
அதேநேரம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி குன்ஹா தண்டனை அறிவித்து அதை செயல்படுத்த அவகாசம் கொடுக்காமல் உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். இதனால் ஜெயலலிதா நீதிமன்றத்தில் இருந்தே சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூத்துக்குடியில் பேருந்து சேவைகள் மீண்டும் துவக்கம்!
மக்களவைக்குள் நுழைந்த இளைஞர்களின் நோக்கம் : திசை மாற்றுகிறதா எதிர்க்கட்சிகள்?
மீண்டும் திறக்கப்படும் சென்னை ஃபோர்டு நிறுவனம்?
வேலைவாய்ப்பு : இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணி!