உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில் ஓய்வு பெற்ற வானூர் வட்டாட்சியர் குமாரபாலன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், கிராம உதவியாளர்கள் பூத்துறை ரமேஷ், கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமளவத்துறை முன்னாள் துணை இயக்குனர் சுந்தரம், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, பொன் கெளதமசிகாமணிக்கு நிலத்தைக் குத்தகைக்குத் தந்த பாஸ்கர் ஆகியோர் அரசு தரப்புக்குப் பாதகமாக பிறழ் சாட்சியமளித்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “அரசு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அலுவலர்கள் எப்படி சாட்சியம் அளிப்பார்கள்” எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராக இன்று (செப்டம்பர் 12) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரியா
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’: டீசர் எப்படி?
2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!