அமைச்சர் பொன்முடி வீட்டிலிருந்து ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடிக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூலை 17) காலை முதல் அமலாக்கத் துறை சோதனை செய்து வருகின்றனர்.
9 மணி நேரத்துக்கும் மேலாகச் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் இல்லத்திலும், விழுப்புரத்தில் உள்ள இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு அமலாக்கத் துறை அழைப்பின் பேரில் பொன்முடி கணக்கு வைத்திருக்கும் வங்கி அதிகாரிகளும் வந்துள்ளனர். வங்கி பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பொன்முடியின் வீட்டிலிருந்து ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பவுண்ட் மற்றும் அமெரிக்க டாலர்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தகவலை இன்னும் அமலாக்கத் துறை உறுதிப்படுத்தவில்லை.
பிரியா
ராமஜெயம் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
பொன்முடி என்ன செய்கிறார்? அமைச்சர் வீட்டிலிருந்து வந்த நபர் பேட்டி!