பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 22) தீர்ப்பளித்துள்ளது. ponmudi assets seized case judgement
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.
இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், அவர்களது சொத்துக்களையும் முடக்கியது.
இந்த வழக்கானது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், 2016-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேலும், பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம் தொடர்பான உத்தரவையும் ரத்து செய்தது. பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை மற்றும் சொத்து முடக்கத்தை விடுவித்ததை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2017-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று டிசம்பர் 19-ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
நேற்று (டிசம்பர் 21) தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தார்.
இந்தநிலையில், சொத்துக்கள் முடக்கம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,
“பொன்முடியின் சொத்து முடக்கத்தை ரத்து செய்த விசாரணை நீதிமன்ற உத்தரவு தவறானது என்றாலும் தற்போது அதனை மாற்ற முடியாது.
தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களுடைய சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்துமஸ்: ஓசூரிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் வெள்ளை ரோஜாக்கள்!
அப்பல்லோவில் சி.வி.சண்முகம்: என்னாச்சு?
ponmudi assets seized case judgement