தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வெகு அமர்க்களமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று (ஜனவரி 14) தைப் பொங்கலை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புத்தூரில் பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
பொங்கல் பண்டிகை என்றாலே கட்சி தலைமையில் இருந்து நிர்வாகிகளுக்கு பரிசுகள், அன்பளிப்புகள், ரொக்கம் வழங்கப்படும். திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு எவ்வளவு பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது என்று இரண்டு தரப்பிலும் விசாரித்தோம்..
”திமுக தலைமையிலிருந்து கிளை செயலாளருக்கு ரூ.2000, நகர செயலாளருக்கு ரூ.50,000, ஒன்றிய செயலாளருக்கு ரூ.2 லட்சம், எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர்களுக்கு ரூ.5 லட்சம் பொங்கல் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
மகளிரணி ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒரே விதமான புடவை, காலண்டர், டைரி கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாவட்ட செயலாளர்களும் கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, புடவை, காலண்டர் ஆகியவற்றை பொங்கல் பரிசாக வழங்கியுள்ளனர்.
அதிமுகவில் கட்சி தலைமையில் இருந்து பொங்கல் பணம் எதுவும் கொடுக்கவில்லை. அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் கட்சி நிர்வாகிகளுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை பொங்கல் பணம் மற்றும் வேட்டி, புடவை ஆகியவற்றை பொங்கல் பரிசாக கொடுத்துள்ளனர்” என்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…