சென்னை தீவுத்திடல் அன்னை சத்தியா நகர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று (ஜனவரி 9) துவங்கி வைத்தார்.
ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1000 ரொக்க தொகை அடங்கிய பொங்கல் தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி, கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் 2.19 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2,429 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: கடுப்பான டாடா குழும தலைவர்
என் வெற்றிக்கு காரணம் இது தான் : அக்சர் படேல் சொன்ன சீக்ரெட்!