கடலூர், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வாக்குச்சாவடி இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, முன்னாள் ஆளுநரும் தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை, நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் காலை முதல் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கடலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சியில் குப்பம் வாக்குச்சாவடி, கோவை கணபதி மாநகராட்சி பள்ளி, ஸ்ரீபெரும்பதூர் ஆயக்கொளத்தூர் 82-வது வாக்குச்சாவடி, திருச்சி ஸ்ரீரங்கம் கொப்பம்பட்டி, தஞ்சை சானூர்பட்டி ஊராட்சி பள்ளி, கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளி பூத் எண் 55, கடலூர், திட்டக்குடி, நெய்வேலி, விருதாச்சலம் ஆகிய பகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாற்று இயந்திரத்தை கொண்டு வந்து வாக்குப்பதிவு நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமா? தெரிந்து கொள்வது எப்படி?
முதல் ஆளாக வாக்களித்தார் அஜித்