Polio Drop stalin Request

போலியோ சொட்டு மருந்து முகாம் : ஸ்டாலின் வேண்டுகோள்!

அரசியல்

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 3) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றோர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். Polio Drop stalin Request

இளம் பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவணை முறையில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என கிட்டதட்ட 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சோதனை சாவடி, டோல்கேட்டுகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய வேண்டுகோள் ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்… நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி!” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தியாவில் மீன் சாப்பிடுவதில் முதலிடம் பிடிக்கும் மாநிலம் இதுதான்!

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

Polio Drop stalin Request

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *