Amar prasad reddy goondas act

அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டாஸ் நடவடிக்கை இல்லை: காவல்துறை

அரசியல்

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் திட்டம் இல்லை என்று தாம்பரம் காவல் ஆணையரகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 8) தெரிவித்துள்ளது.

சென்னை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்ட கொடிக்கம்பத்தை ஜேசிபி வாகனம் மூலம் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியபோது,

ஏற்பட்ட மோதல் காரணமாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை அக்டோபர் 21-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தநிலையில் தன்னுடைய கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமர்பிரசாத் மனைவி நிரோஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் என்னுடைய கணவர் இல்லை.

தமிழக அரசு மற்றும் ஆளும் திமுக அரசின் சமூக விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தியதற்காகவே சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால் அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து எனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா,

“தனது கணவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுவிடுவார் என்ற அச்சத்தில் முன்கூட்டியே இதுபோன்ற வழக்கை தொடர்ந்துள்ளார்.

தற்போதைய நிலையில் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னதாகவே இந்த வழக்கு தொடரப்பட்டதாக கூறி அமர்பிரசாத் ரெட்டி மனைவி நிரோஷா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டிசம்பர் வரை பரவும் டெங்கு : மக்களே உஷார்!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *