Police Grant Request: Verbal order flew to tn police stations

காவல்துறை மானியக் கோரிக்கை : பறந்த வாய்மொழி உத்தரவு!

அரசியல்

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 28) பதிலளிக்க உள்ள நிலையில், காவல் நிலையங்களில் கடந்த 2 நாட்களாக யாரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 21ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று மாலை மற்றும் நாளை காலை காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு ஆகிய துறைகள் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் அத்துறைகள் மீது எழுப்பும் கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த 2 நாட்களாக யாரையும் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்றும், புகார்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்து அனுப்புவதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது,

“காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 28,29 ஆகிய தேதிகளில் பதிலளிக்க உள்ளார்.  இந்த நிலையில் காவல் விசாரணையில் ஏதும் மரணங்கள் அல்லது அசாம்பாவிதங்கள் நடந்து சர்ச்சையானால், அது சட்டமன்றத்தில் எதிரொலிக்கும்.

எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் யாரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது” என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

ஹெல்த் டிப்ஸ்: சில நாட்கள் மட்டும் தூக்கமின்மையால் தவிப்பவரா நீங்கள்?

பியூட்டி டிப்ஸ்: பருக்கள் என்பது பிரச்சினையல்ல… புரிந்துகொள்ளுங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0