அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மீது 3 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது,
“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வரையும் அமைச்சர்களையும் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அண்ணாமலை மேடையில் ஏறும்போது நாங்கள் மேடையில் ஏறுவோம்.” என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில், தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா,
அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில், “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது, கால் இருக்காது, நாக்கு இருக்காது.” என்று பேசியிருந்தார்.
சசிகலா புஷ்பா பேசியதை தொடர்ந்து பி.என்.டி காலனியில் உள்ள அவரது வீட்டில் பூந்தொட்டி, கார் கண்ணாடி மற்றும் ஜன்னல் மர்ம நபர்களால் நேற்று சூறையாடப்பட்டது.
இந்தநிலையில்,சசிகலா புஷ்பா மீது நேற்று (டிசம்பர் 22) தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல் 504,505,506/1 என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள், ராமகிருஷ்ணன், இசக்கிராஜா உள்ளிட்ட 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
பஞ்சாப் அணி தவறு செய்து விட்டது: கிறிஸ் கெயில்
நாமக்கல்: அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்!