இமானுவேல் சேகரன் நினைவு தினம்… தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?

அரசியல்

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்த செல்லும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகை பேசியிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

33 வயதில் மறைந்த இமானுவேல் சேகரன் தனது 18 வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர். 19 வயதில் இரட்டை குவளைக்கு எதிராக மாநாடு நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்தவரின், 67 வது ஆண்டு நினைவு நாள் விழா இன்று (செப்டம்பர் 11)  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.

திமுக சார்பில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “எங்களைப் போன்ற அரசியல் தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சிய போக்குடன் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று காட்டமாக பேசினார்.

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டு குறித்து ராமநாதபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் டி.எஸ்.பி ஒருவரிடம் நாம் கேட்டோம்.

“இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு கடந்த ஒரு மாதமாக அதிகாரிகளுடன் காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு மேற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சிங் தலைமையில், 20 எஸ்பி மற்றும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 7 ஆயிரம் போலீசார்கள் எங்கேங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஸ்கீம் போட்டார். மேலும், முக்கிய பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அரசியல் கட்சி தலைவர்களை ராமநாதபுரத்தில் இருந்து முன்னும் பின்னும் எஸ்கார்ட்  (பாதுகாப்பு) போட்டு நிகழ்ச்சி நடைபெறும் பரமக்குடிக்கு அழைத்து வந்து, மீண்டும் ராமநாதபுரத்திற்கே அழைத்து சென்று பாதுகாப்பாக விட்டோம்.

ஒவ்வொரு விஐபி காருக்கும் பின்னால் பத்து கார் முதல் 50க்கும் மேற்பட்ட கார்கள் வருகிறது. தலைவர்களிடம் பின்னால் வரும் கார்களை குறைக்க சொன்னால் கோபப்படுகிறார்கள். இருப்பினும் அதையும் மீறி பாதுகாப்பு கொடுத்து வருகிறோம்.

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின் கார் 120 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றது. காவல் துறையில் உள்ள எஸ்கார்ட் கார் அந்த வேகத்தில் பின்தொடர முடியவில்லை. இருப்பினும் மைக்கில் அலார்ட்ஸ் செய்து அவர் சென்ற காருக்கு அதிகமாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டது” என்றார்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தனுஷுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு வாபஸ்!

“ஆறு மாதம் தான் தாக்குப்பிடிக்கும்”… மூன்றாவது முறையாக விஜய்யை டார்கெட் செய்யும் அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *