புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பாமக பங்கேற்கும்: அன்புமணி

அரசியல்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பாமக பங்கேற்கும் என்று அன்புமணி ராமதாஸ் இன்று (மே 26) தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவுக்காக கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை.

pmk will attend new parliament opening event: anbumani

மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

இதனையடுத்து குடியரசுத் தலைவரை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்! தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

எனது வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெறவில்லை’: செந்தில் பாலாஜி விளக்கம்!

கரூர் திமுகவினர் களேபரம்: எஸ்.பியிடம் முறையிட்ட ஐ.டி. அதிகாரிகள்

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *