ரூ.1000 கோடியை நோக்கி டாஸ்மாக் வசூல்! – ராமதாஸ் வேதனை

அரசியல்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இன்று காணும் பொங்கல் என்பதால் விழாக்கால வசூல் ரூ.1000 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விழாக்காலம் என்றால் நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் குவிக்கும் வசூலை விடவும் டாஸ்மாக் மூலம் அரசு கஜானாவில் வசூல் மழை பொழியும். அதனை இந்தாண்டு பொங்கல் விடுமுறை, ’டாஸ்மாக் வசூல் தான் டாப்’ என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் காரணமாக தொடர் விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை முதலாகவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்தது.

வெள்ளி, சனிக்கிழமைகளில் இருந்த விற்பனையை விட ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கத்தை விட 3 மடங்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனை அதிகரித்து உள்ளது. அதனை தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டதால் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன.

வழக்கமாக தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று மது விற்பனை ரூ.450 கோடியை தாண்டி இருக்கலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும், வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும் மதுவிற்பனை நடந்து இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் மொத்தமாக கடந்த 4 நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.800 கோடியை எட்டியிருக்கும்.

உறவுகளை சந்தித்து ஆசி பெறும் காணும் பொங்கல் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனால் மதுவிற்பனை இன்றும் 2 மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மூலம் மது விற்பனை மூலம் டாஸ்மாக் வசூல் ரூ.1000 கோடியை எட்டும் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ”மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு. தமிழ்நாட்டில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி மது விற்பனை ரூ.400 கோடியாம். தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி!

ஸ்ரீஹரிகோட்டாவில் ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *