சேலத்தில் அறிவுசார் மையம் அமைக்க வேண்டும் என்ற பாமக எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 27) 110 விதியின் கீழ், திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனை வரவேற்று பேசிய சேலம் பாமக எம்.எல்.ஏ அருள், “ சென்னை, திருச்சி, மதுரையில் நூலகம் என்பது அற்புதமான அறிவிப்பு. அதுபோன்று சேலத்திலும் நூலகம் வேண்டும்.
சேலத்தில் கலைஞர் சுற்றாத இடமில்லை, செல்லாத தெருக்கள் இல்லை, உண்ணாத உணவு இல்லை. கலைஞருக்கு மிகவும் பிடித்த மாவட்டம் சேலம்.
அரிசிபாளையத்தில் கலைஞர் கதை எழுதிய வீடுகள் இருக்கிறது. ஏற்காட்டில் ஒரு பெண்டு இருக்கிறது. அந்த பெண்டில் அமர்ந்துதான் கலைஞர் சேலத்தை ரசித்தார் என்பார்கள்.
அவர் நெஞ்சார நேசித்த சேலத்துக்கும் முதல்வர் ஒரு அறிவுசார் மையத்தையும், ஒரு நூலகத்தையும் தருவார் என்று எதிர்பார்க்கிறோம். முதல்வரின் முகத்தை பார்த்தால் ஒரு பிரகாசமும் சிரிப்பும் தெரிகிறது” என்றார்.
உடனே எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அடுத்த நிதிநிலை அறிக்கையில் நீங்கள் எதிர்பார்க்கலாம்” என பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டங்கள்: உதயநிதி அறிவிப்பு!
INDvsENG : மழை பெய்து போட்டி ரத்தானால் இந்தியா வெளியேறிவிடுமா?