வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது பாமக.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பாமக உயர்மட்ட தலைமை நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு பாமக கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், “ கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழுவில் கூட்டணியை அறிவிக்கிற அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கியிருந்தோம்.
இன்று தைலாபுரத்தில் முதலில் நிர்வாகக் குழு கூடியது, அடுத்ததாக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு, பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
நாளை ஒப்பந்தம் ஆன பிறகு, எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என ராமதாஸ் அறிவிப்பார்.
பிரதமரை பாமக தலைவர் அன்புமணி நாளை சேலத்தில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நாங்கள் பாஜகவில் கூட்டணி வைப்பதைப் பயனுள்ளதாகக் கருதுகிறோம்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
6 மாநில உள்துறை செயலாளர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
கோவையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’