பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும், தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்த தினமாகிய இன்று, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ஐயா ராமதாஸ் அவர்கள், நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காலை முதலே ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் #DrRamadossAyya85, #மருத்துவர்அய்யா85 என்ற ஹாஷ்டேக் மூலம் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அடுத்த மூன்று மணி நேரம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை?
நெல்லை: அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை!
கடன் வசூலில் மனிதாபிமானம்: வங்கிகளுக்கு நிர்மலா அறிவுரை!