அடுத்து நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டை இன்னும் ஏன் வழங்கவில்லை? என்று முதல்வர் ஸ்டாலினிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கேள்வி எழுப்ப வேண்டும் என்று பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். pmk balu asks questions
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம்!
தமிழக வரலாற்றில் வன்னியர்களுக்கு மிக அதிக துரோகம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்ற உண்மையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அம்பலப்படுத்தியதை அறிவாலயத்து அடிமைகள் பட்டியலில் புதிதாக அட்மிஷன் ஆகியிருக்கும் அமைச்சர் ராஜேந்திரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.
அதனால் தான் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். அது இமாலய சாதனையல்லவா? என்று அறிவாலயத்தில் யாரோ எழுதிக் கொடுத்த காகிதத்தை தனது அறிக்கை என்று வெளியிட்டிருக்கிறார்.
அமைச்சர் ராஜேந்திரனின் புலம்பல்களுக்கெல்லாம் காரணம் அரைகுறை தான். ஆம், அரைகுறையான புரிதல்கள் தான். வன்னியர் இட ஒதுக்கீட்டில் அமைச்சர் ஆனாலும், அதுகுறித்த வரலாறுகளை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்வதில்லை.

தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை நடக்காத நிகழ்வு! pmk balu asks questions
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அவர்கள் கட்சித் தலைவர் 2019-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது என்ன சொன்னார்? என்பதையும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைகுறையாக தெரிந்து கொண்டிருப்பது தான் இத்தகைய உளறல்களுக்கு காரணம் ஆகும்.
‘‘எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என 2019 அக்டோபர் 7-ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார்.
ஆட்சிக்கு வந்து அந்த வாக்குறுதியை இன்றைக்கு நிறைவேற்றியுள்ளார். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை நடக்காத நிகழ்வு’’ என்று சிலாகித்து பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரன். ராஜேந்திரனின் அரைகுறை புரிதலுக்கு இதைவிட சிறந்த எடுத்துக் காட்டு வேறு எதுவும் இருக்க முடியாது.
ராஜேந்திரன் சுட்டிக்காட்டும் அதே விக்கிரவாண்டி பரப்புரையில் ஸ்டாலின் வேறு ஒன்றையும் கூறினார். அது என்ன? என்பதை அறிவாலயத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் முரசொலி நாளிதழைப் படித்து அவர் அறிந்து கொள்ள வேண்டும்.
அவரது புரிதலுக்காக அந்த செய்தியை நானே தெரிவிக்கிறேன். ‘‘ஏற்கனவே கலைஞர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்’’ என்பது தான் அப்போது ஸ்டாலின் அளித்த வாக்குறுதி.
திமுக தலைமையால் சுரண்டப்படும் வன்னியர்கள்
தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்ததை சாதனையாகக் கூறிக் கொள்ளும் ராஜேந்திரனுக்கு, அந்த தியாகிகள் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படாதா?
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்தீர்களே அதை நிறைவேற்றினீர்களா? என்று ஸ்டாலினிடம் ராஜேந்திரன் வினா எழுப்பியிருக்க வேண்டாமா? அதையெல்லாம் அரைகுறை புரிதல் கொண்ட ராஜேந்திரன் செய்ய மாட்டார். அவ்வாறு கேட்டால், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அரைகுறை அதிகாரம் கொண்ட பதவியும் பறிக்கப்பட்டு விடும் என்பதை பிழைப்புவாதி இராஜேந்திரனுக்குத் தெரியாதா?
சேலத்துச் சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் இப்போது உயிருடன் இருந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருந்தால் அவர் சும்மா இருந்திருப்பாரா? சீறி எழுந்திருப்பார். அவருக்கு அஞ்சி ஸ்டாலின் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார். ஆனால், ராஜேந்திரனால் அது முடியாது.
சேலம் மாவட்டத்தில் இமயமாக உயர்ந்து நின்ற வீரபாண்டியாரை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திமுகவின் இன்றைய தலைமையால் நஞ்சூட்டி வளர்க்கப்பட்டவர் தான் இந்த ராஜேந்திரன். அவரது நன்றி மறந்த தன்மையையும், நாடகமாடும் குணத்தையும் வீரபாண்டியாருக்கு எதிராக கடந்த காலங்களில் வெளிப்படுத்தினாரோ, அதேபோல், இப்போது வன்னிய சமூகத்திற்கு எதிராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் பற்றியெல்லாம் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர் இந்த ராஜேந்திரன்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயங்களான வன்னியர்களும், பட்டியலினத்தவரும் எப்படியெல்லாம் திமுக தலைமையால் சுரண்டப்படுகின்றனர்.
வன்னியர் என்பதால் அமைச்சர் பதவி!
இந்த ஒரு சமூகங்களையும் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் அமைச்சரவையில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் எவ்வாறு மறுக்கப்படுகிறது? என்பதை ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து தான், தம்மை நியாயமானவராக காட்டிக் கொள்வதற்காக ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கினார் ஸ்டாலின். அதற்காக அவர்களுக்கு இராஜேந்திரன் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.
சுற்றுலாத்துறையில் வித்தகர் என்பதற்காக ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி வழங்கப் படவில்லை. அவர் ஒரு வன்னியர் என்பதற்காகத் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அதை ராஜேந்திரன் மறந்து விடக் கூடாது. அச்சமூகத்திற்கு துரோகம் இழைக்க நினைக்கக் கூடாது. அந்த இனத்திற்குரிய அடிப்படைக் குணங்கள் ஏதேனும் அவருக்கு இருந்தால், அடுத்து நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டை இன்னும் ஏன் வழங்கவில்லை? என்று வினா எழுப்ப வேண்டும். அடிமைத் தொழில் செய்வதை விட அப்படி வினா எழுப்புவது தான் அவருக்கு பெருமையாக இருக்கும்” என்று பாலு தெரிவித்துள்ளார். pmk balu asks questions