anbumani ramadoss today press meet

என்.எல்.சி விவகாரம்: தங்கம் தென்னரசுவை சாடிய அன்புமணி

அரசியல்

வன்முறை போர்வையை போர்த்திக் கொண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பாமகவினரை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், ”மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சின்னக்குழந்தையாக பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் இருந்தே பாமக என்.எல்.சி க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாட்டில் இன்னும் பத்து ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறை வரும் என்று ஐநா சபை கூறியிருக்கிறது.

இருக்கும் நிலத்தை எல்லாம் அழித்துவிட்டால் உணவுக்கு என்ன செய்ய போகிறோம். என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. என்.எல்.சி யின் பயன்பாடு முடிந்துவிட்டது.

அந்த காலத்தில் என்.எல்.சி யின் பயன்பாடுகள் தேவை பட்டது, ஆனால் இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது.

இதைக்கூட நான் சொல்ல வில்லை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் மின்சாரத்தை நாங்கள் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்கிறோம் என்றும் அவர் தான் சொன்னார். இப்படிபட்ட சூழலில் நிலத்தை எதற்கு கையகப்படுத்த வேண்டும்.

குடிக்கும் நீரை கடலுக்கு அனுப்பும் அவலம் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. அதே நேரம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் இங்கு தான் இருக்கிறது.

விவசாய சங்கங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள். இது வெறும் நெய்வேலி பிரச்சினை அல்ல. இது நம்முடைய பிரச்சினை. கடுமையான விளைவுகளை தமிழக அரசு சந்திக்கக் கூடும். இந்த பணியை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சின்னக்குழந்தையாக பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் இருந்தே பாமக என்.எல்.சி க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது. இது குறுகிய கால போராட்டம் அல்ல.

அன்று நாங்கள் போராடும் பொழுது நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு கூடுதலாக கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டோம்.

இதுவரைக்கும் யாருக்காவது வேலை வாய்ப்பை கொடுத்தார்களா. தங்கம் தென்னரசு கொடுத்தாரா? இல்லை அவர் அப்பா கொடுத்தாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மாதத்திற்கு ஒருவரை தூக்கிலிடும் சிங்கப்பூர் அரசு: கோபத்தில் மக்கள்!

“சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது” – எஸ்.ஆர்.பிரபு

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *