குஜராத் தேர்தலில் வரலாற்று வெற்றிக்காக கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 8) நடைபெற்றது. இதில் குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் வெற்றிபெற்றது.
இதனால் அங்கு தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் “குஜராத்திற்கு நன்றி. இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆதரித்துள்ளனர். குஜராத்தின் ஜனசக்திக்கு தலைவணங்குகிறேன். கடினமாக உழைத்த ஒவ்வொரு பாஜக தொண்டர்களும் ஒரு சாம்பியன். நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகி இருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் , அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் ”பாஜக மீதான பாசத்திற்கும் ஆதரவிற்கும் ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும், மக்கள் பிரச்னைகளை இனிவரும் காலங்களில் எழுப்பவும் தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
” தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்”– மாண்டஸ் புயல் அலர்ட்!
கோரிக்கை வைத்த பள்ளி மாணவி : பரிசு கொடுத்த முதல்வர்!