குஜராத் சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 5) வாக்களித்தார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்தநிலையில், 93 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவானது, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்தநிலையில், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சபர்மதி தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவிற்கு பிரதமரை வரவேற்பதற்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி காரிலிருந்து இறங்கி வந்து பொதுமக்களுக்கு கையசைத்தவாறு வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றார். அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை வாக்களித்தார்.
வாக்களித்து விட்டு தனது ஒற்றை விரலை பொதுமக்களிடம் காண்பித்தபடி, சிறிது தூரம் நடந்து சென்று பிரதமர் நரேந்திர மோடி காரில் ஏறி சென்றார்.
செல்வம்
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
கலையின் மனசாட்சி: நடாவ் லபீட் என்ற கலைஞனும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும்