தேச பணியில் தமிழிசை சவுந்தரராஜன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்று பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று (ஜூன் 2) பிறந்தநாள். அவருக்குப் பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
கடிதம் அனுப்பிய மோடி
பிரதமர் மோடி தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
“ஆளுநராக, நீங்கள் உங்களின் அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றிய செயல்திறனும், கடமை உணர்வும், மாநிலத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச் செல்லும். சமூகத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அதே அர்ப்பணிப்புடன் சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான ஆயுளை வழங்கவும், தேச சேவையில் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதற்கு, “உங்களின் 24/7 உழைப்பு எங்களுக்கு உத்வேகம்” என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் , “தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான சகோதரி தமிழிசை சவுந்தர ராஜனுக்கு எனது அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகள்” என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தமிழிசைக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிரியா
“சாட்சிகள் பொய் சொன்னாலும், சாட்சியங்கள் பொய் சொல்லாது” : கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்!
கோடை விடுமுறை நிறைவு: 2,200 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!