யூதர்களின் புத்தாண்டான ரோஷ் ஹஷனாவையொட்டி உலகம் முழுவதும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யூதர்களின் புது வருடமான ரோஷ் ஹஷானா கொண்டாட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடக்கிறது.
இதை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் யயர் லாபிட்டுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இன்று (செப்டம்பர் 25) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “எனது நண்பர் யயர் லாபிட்… இஸ்ரேலின் நட்பு மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்தினருக்கு ரோஷ் ஹஷனாவையொட்டி அன்பான வாழ்த்துக்கள்.
புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். ஷனா தோவா!” என்று ஆங்கில மொழியிலும், யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியிலும் குறிப்பிட்டுள்ளார்.
யூதர்களின் புது வருடமான ரோஷ் ஹஷானா, என்பது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ரோஷ் ஹஷானா, யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினத்தில் ஆரம்பமாகும்.
–வேந்தன்
கோவை எப்படி இருக்கிறது? பதிலளிக்கும் மாநகர காவல் ஆணையர்
தீபாவளிக்கு பெட்ரோல் பாமா? அப்டேட் குமாரு