கார்கேவுக்கு மோடி வாழ்த்து!

அரசியல்

காங்கிரஸ் தலைவராக மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தலைவராகப் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் இடைக்கால தலைவராக இருந்த சோனியா காந்தி.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

அந்த பதிவில், இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் போராடும் ஒரு முக்கியமான கட்டத்தில் கார்கே ஒரு பழைமையான கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த பொறுப்பில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியும் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்கேவுக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் பதவிக்காலம் இனிமையாக அமையட்டும் என்று கூறியுள்ளார்.

பிரியா

செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது: அமலாக்கத் துறை!

தடையை மீறி போராட்டம் : எடப்பாடி விடுவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.