பிரதமர் மோடி இன்று (ஜனவரி 20) திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார்.
மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னையில் நேற்று (ஜனவரி 19) கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து இன்று திருச்சி செல்லும் பிரதமர் மோடி, காலை 11 மணியளவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து கோவிலில் கம்ப ராமாயணத்தின் வரிகளை பல்வேறு அறிஞர்கள் வாசிப்பதையும் அவர் கேட்கிறார்.
அதன்பிறகு, மதியம் 2 மணியளவில் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு மற்றும் பூஜை செய்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் மோடி வழிபாடு செய்கிறார். பின்னர், தனுஷ்கோடிக்கு அருகில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாகக் கூறப்படும் அரிச்சல் முனைக்கும் பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி, ராமேஸ்வரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி!
விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!