மக்களவையில் இன்று (ஜூலை 2) குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி, ”
ராகுலுக்கு ஆதரவு இருப்பதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஆனால், அவர் பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் ஜாமீனில் இருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஓபிசி மக்களை திருடர்கள் என்று அவதூறாக பேசிய வழக்கில் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். தனது பொறுப்பற்ற பேச்சால், உச்சநீதிமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்டார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும் மிகப்பெரிய தலைவருமான சாவர்க்கரை அவமதித்தாக ராகுல் மீது வழக்கு இருக்கிறது.
நாடாளுமன்றம் நேற்று (ஜூலை 1) தவறாக வழிநடத்தப்பட்டது. ஜனநாயகத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாவிட்டால் வழிநடத்த முடியாது. நாடாளுமன்றத்தில் பொய்களை கட்டவிழ்த்துவிட்ட எதிர்க்கட்சி தலைவர் மீது சபாநாயகர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று நாடு எதிர்பார்க்கிறது.
இந்துக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது மிகவும் தீவிரமான விஷயம். இந்து மதம் பயங்கரமானது என்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியான திமுக இந்து மதத்தை மலேரியாவுடன் தொடர்புபடுத்தி பேசியதை ஏற்க முடியாது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
267 கிலோ தங்க கடத்தல்: சிக்கிய பாஜக முக்கிய புள்ளி… விசாரணை வளையத்தில் அண்ணாமலை
“முதலில் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்” : திருமாவளவனுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!
Comments are closed.