தேர்தல் முடிவுகள்: 4 மாநில மக்களுக்கும் பிரதமர் நன்றி!

Published On:

| By Monisha

pm modi thanks 4 state people

சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளித்த 4 மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 3) நடைபெறுகிறது. இதில் தெலங்கானா மாநிலத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் முன்னிலையில் இருந்து வருகிறது.

தெலங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருகிறது. கிட்டத்தட்ட 3 மாநிலங்களில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் தான் உள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவிற்கு ஆதரவு அளித்த 4 மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நல்லாட்சி மற்றும் வளர்ச்சி, அரசியலுக்கு மக்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இந்த மாநிலங்களின் மக்களின் உறுதியான ஆதரவிற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு எக்ஸ் பதிவில், “தெலங்கானாவில் உள்ள என் அன்பு சகோதர, சகோதரிகளே பாஜகவிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும். தெலங்கானாவுடனான எங்களது பந்தம் பிரிக்க முடியாதது. மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

தற்காலிக பின்னடைவு… காங்கிரஸ் மீண்டு வரும் – கார்கே நம்பிக்கை!

சத்தீஸ்கர் : தோல்வியை தழுவிய அமைச்சர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share