இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 27) தமிழகம் வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர், ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 2.35 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலமாக மாதப்பூரில் நடைபெறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, என் மண் என் மக்கள் இறுதி யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த பொதுக்கூட்டதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். அங்கு தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் இரவு தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
நாளை காலை 9.45 மணிக்கு மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ரூ.17,300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதனை தொடர்ந்து நெல்லையில் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் மகாராஷ்டிரா செல்கிறார். பிரதமர் மோடி தமிழக வருகையை ஒட்டி மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பூக்களால் அலர்ஜியா? சமந்தா சொல்வது நிஜமா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!