ஆதீனங்களிடமிருந்து சிறப்பு வழிபாடு நடத்தி அளிக்கப்பட்ட செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி செங்குத்தாக நிறுவியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ரூ.1250 கோடியில் கட்டுப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பாரம்பரிய சடங்குகளுடன் இன்று (மே 28) காலையிலேயே தொடங்கியது.
இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு காலை 7.15 மணிக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. பின்னர் காலை 7.30 மணியளவில் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் ஹோமம் பூஜைகள் தொடங்கியது.
தமிழக ஆதீனங்கள், ஓதுவார்களின் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடியும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும்
கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பெற்ற பிரதமர், அவர்களிடம் தனித்தனியாக ஆசிபெற்றார்.
தொடர்ந்து ஆதீனங்கள் புடைசூழ மக்களவைக்குள் நுழைந்து, சபாநாயகர் இருக்கைக்கு வலப்புறம் செங்கோலை செங்குத்தாக பிரதமர் மோடி நிறுவினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி காலை 12 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
மருத்துவமனையின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – உக்ரைனில் மீண்டும் பதற்றம்!