எதிர்க்கட்சிகளின் கடுமையான கோஷங்களுக்கு மத்தியில் பேசி வரும் பிரதமர் மோடி எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் என்று தெரிவித்தார்.
பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசத் தொடங்கினார். அப்போது அவரை பேச விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
எனினும் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி, அவை உறுப்பினர்களின் நடவடிக்கைகளை நாடே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதில் தாமரை மலரும்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செயல்பாடுகள் தேச நலனைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை. ஆனால் பாஜக அரசு நாட்டின் நீண்ட கால பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வதோடு அதில் உறுதியாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டு காலத்தைக் காங்கிரஸ் வீணடித்துவிட்டது.
2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காங்கிரஸ் எல்லா இடங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கி வைத்திருந்ததைக் காண முடிந்தது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இது காங்கிரஸ் ஆட்சியில் 3 கோடியாக இருந்தது.
கர்நாடக மாநிலத்தில் 1.70 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நலத்திட்டங்களின் பயன் ஜன்தன் வங்கி கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்றடைகிறது.
ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
பிரியா
வாரிசு படத்தின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது: கணேஷ் வெங்கட் ராம்
‘மோடியும் அதானியும் நண்பர்கள்’: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கோஷம்!